கெடாவின் முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் அடுத்த பொதுத் தேர்தலில் கெடாவில்தான் போட்டியிடுவார்.
இதை முக்ரிஸ் சினார் ஹரியானுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் வலியுறுத்தினார்.
“சிலர் நான் புத்ரா ஜெயாவில் போட்டியிட வேண்டும் என்கிறார்கள். ஆனால், நான் கெடாவைத்தான் விரும்புகிறேன்.
“கெடாவில் எந்த இடம் என்றால், அது இரகசியம், சொல்ல மாட்டேன்”, என பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) உதவித் தலைவருமான முக்ரிஸ் கூறினார்.
அவர் இப்போது ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர். 2008-இல் ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியிலும் அவர் வென்றார்.
மக்கள் பெர்சத்து கட்சியில் சேர ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஆண்டு இறுதிக்குள் 500,000 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்குக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
புத்ரா ஜெயாவுக்கு சிறந்த வேட்பாளர் மகாதீரே ஆகும்.