14வது பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இடைக்காலத் தலைவர் முகைதின் யாசின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.
“இப்போது பிரதமர் யார் என்று அறிவிப்பது சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். அது கட்சியைப் பிளவுபடுத்தவும் கூடும்.
“அதனால் ( எதிர்காலப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க) இப்போது எதையும் செய்யப் போவதில்லை. ஒருவேளை எதிரணி வென்றால் முகைதின் பெரும்பாலும் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது.
“அதுவும்கூட அவரது கட்சியைப் பொறுத்தது. அது அவரைத் தலைவராக ஏற்க வேண்டும், எதிரணிக் கூட்டணியும் அவரைப் பிரதமராக ஏற்க வேண்டும்”. செப்டம்பர் 21-இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
அனுவர் என்றால் நாங்கள் REDY
அணுவார் தான் அடுத்த தலை
அனைத்து மலேசியர்களாலும் கவர பட்ட ,நம்பிக்கை தரகூடிய தலைவர் அன்வார் இப்ராகிம் தான்.
அடுத்த பிரதமர், பி.கே.ஆரின் அன்வாரும் கிடையாது, மகாதிமிர் கட்சியின் அனுமாரும் [முகைதீன்] கிடையாது. பழையபடி நமது ராவணன்[நஜிப்] தான் பிரதமர். குறித்துக் கொள்ளுங்கள். நாளையிலிருந்து BRIM [பிரிம்] பணம் அனைவரது வாங்கி கணக்கிலும் சேரவுள்ளது.