சீனாவில் அதிகரிக்கும் முதியவர்கள் எண்ணிக்கை!

china old peopleசீனாவில் வரும் 2020ல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 24 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சீனாவில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இது வரும் 2020ல், சீனியர் குடிமக்களின் (60 வயதுக்கு மேற்பட்டோர்) எண்ணிக்கை மட்டும் ஒட்டு மொத்த மக்கள் தொகையின் 17 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய நலத்துறை அதிகாரி லியு கூறுகையில், சீனாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 26 கோடி பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தான் 86 சதவீதம் சீன மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. தவிர சீனியர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது என்றார்.

-http://news.lankasri.com