வான் அசிசாவுக்கு மகாதிர்மீது வருத்தமில்லை

pkrஎதிரணித்     தலைவர்   வான்   அசிசா   வான்   இஸ்மாயில்    தம்   கணவர்   அன்வார்   இப்ராகிமைத்    துணைப்   பிரதமர்     பதவியிலிருந்து   விலக்கிய       முன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்   முகம்மட்மீது   இப்போதெல்லாம்   ஆத்திரம்   கொள்வதில்லை.

“அப்போது   ஆத்திரப்பட்டது   உண்மைதான்.  நானும்  மனுசிதானே.   ஆனால்,  ஆத்திரத்தை    அப்படியே  வைத்துக்கொண்டிருக்க    முடியாது”,  என்றவர்    தெரிவித்ததாக    சினார்   ஹரியான்   கூறியுள்ளது.

மனிதர்கள்   தவறு   செய்யக்கூடியவர்களே   என்பதைத்    தாம்   உணர்வதாக    அவர்   குறிப்பிட்டார்.

“யாராவது   ஒருவர்   உங்களுக்கு    எதிராக   ஏதாவது   செய்து   விட்டால்   அதை  அப்படியே   மனதில்   வைத்துக்   கொண்டிருக்கக்  கூடாது.  அது,  இன்ஷா  அல்லா,  ஒரு  நாள்   உங்களுக்குச்     சாதகமாக  அமையும்”,  என்றாரவர்.