உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தும் முக்கிய பிரச்சனைகளில் முன்னணியில் இருப்பது தீவிரவாதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வளர்ச்சி அடைந்த அல்லது வளரும் நாடுகளாக இருந்தாலும், ஒவ்வொரு நாடும் ஒரு முக்கிய பிரச்சனையை கடும் போராட்டத்துடன் எதிர்கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ்வாறு சில நாடுகளை பற்றியும் அவை எதிர்க்கொண்டு வரும் முக்கிய பிரச்சனை பற்றியும் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் 26 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சர்வதேச அளவில் துருக்கி நாடு தீவிரவாதம் குறித்தும் ஸ்பெயின் நாடு வேலைவாய்ப்பின்மை குறித்தும் அதிகளவில் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் வெளியான சில நாடுகளை பற்றி பார்ப்போம் !
1. துருக்கி – தீவிரவாதம் (76 சதவிகிதம்)
2. ஸ்பெயின் – வேலைவாய்ப்பின்மை (74)
3. இத்தாலி – வேலைவாய்ப்பின்மை (66)
4. மெக்ஸிகோ – குற்றம் மற்றும் வன்முறை (60)
5. ரஷ்யா – வறுமை மற்றும் சமூக சமஉரிமை இல்லாமை(57)
6. பிரான்ஸ் – தீவிரவாதம் (55)
7. ஜேர்மனி – வறுமை மற்றும் சமூக சம உரிமை இல்லாமை(45)
8. சீனா – சமூக ஒழுக்க நெறிமுறைகள் சரிவு(43)
9. பிரித்தானியா – புலம்பெயர்ந்தவர்களை கட்டுப்படுத்துவது(42)
10. ஜப்பான் – வறுமை மற்றும் சமூக சம உரிமை இல்லாமை(39)
11. அவுஸ்ரேலியா – வேலைவாய்ப்பின்மை (38)
12. அமெரிக்கா – தீவிரவாதம்(35)
-http://world.lankasri.com