மரியா சின்னுக்கு மரண எச்சரிக்கை

mariaநவம்பர்    19  பெர்சே  5  பேரணி   நெருங்கிவரும்   வேளையில்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவுக்கு   மரண  எச்சரிக்கை   ஒன்று   வந்திருக்கிறது.

நிழற்பட   உருவில்   அந்த   மரண   எச்சரிக்கை   விடுக்கப்பட்டுள்ளது.  அப்படத்தில்  கருப்பு   உடை   அணிந்த  ஒருவர்.   அவரின்   ஒரு  கை   கத்தி  ஒன்றைப்  பிடித்திருக்கிறது.  மற்றொரு  கை  பெர்சே-5   டி-சட்டை   அணிந்த   மரியாவின்  பிடரியைப்  பிடித்துள்ளது.

“அடையாளம்   தெரியாத   நபர்களிடமிருந்து   இப்படிப்பட்ட   மிரட்டல்கள்   நிறைய   வருவதுண்டு”,  என்றாரவர்.

“வழக்கமாக   அவற்றைப்  புறக்கணித்து    விடுவேன்.   ஆனால்,  இது   எல்லை  மீறிவிட்டது……எனக்கு  மூன்று   பிள்ளைகள்   இருக்கிறார்கள்”,  என்று  கூறியவர்   இது   குறித்து    இன்று   மாலை   போலீசில்   புகார்    செய்யப்போவதாக   தெரிவித்தார்.

இதேபோன்ற  மரண   எச்சரிக்கை   பெர்சே  கூட்டமைப்பு    உறுப்பினர்  மந்தீப்   சிங்,   மனித  உரிமைக்  கழகத்    தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசன்   ஆகியோருக்கும்   அனுப்பப்பட்டுள்ளன.

மந்தீப்   இதனால்  குழப்பமடைந்திருக்கிறார்.

“முன்பு     எங்களை  ஐஎஸ்   என்றார்கள்.  இப்போது   ஐஎஸ்   எங்களைக்  கொல்லப்போவதாகக்  கூறுகிறது.  ஒன்றும்  புரியவில்லையே”,  என்றாரவர்.