இளவரசரின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரசு

saudi_sentences_001சவுதி அரேபியா நாட்டில் வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் Turki bin Saud al-Kabir என்ற இளவரசர் ஆகும்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பவர் மாதம் நிகழ்ந்த ஒரு தகராறில் இளவரசர் வாலிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

எனினும், அப்போது அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘கொலை குற்றம் நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்தது யாராக இருந்தாலும், சவுதி அரசு நீதியை நிலை நாட்ட தயாங்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணமாகும்’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு அரசர் பைசலை திட்டமிட்டு கொன்ற குற்றத்திற்காக இளவரசர் Faisal bin Musaid என்பவருக்கு அப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளவரசரின் இந்த மரண தண்டனையானது 2016ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட 134-வது மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com