இந்தியா, சீனா நாடுகளில் நிலவும் காற்று மாசு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெருமைக்குரிய வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விண்வெளியில் இருந்து இந்தியா, சீனா பார்க்கும் போது அதிர்ச்சி அடைவேன், காற்று மாசுபாடு அதிகம் இருக்கும்.
கடந்த 2015ம் ஆண்டு கோடை காலத்தின் போது சீனாவை பார்த்தேன், தெளிவாக இருந்தது.
அடுத்தநாள் தான் தெரியவந்தது, நான் பார்த்த நாள் அன்று அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டிருந்தன.
கார்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது, சுற்றுச்சூழலை நாம் எந்த அளவுக்கு மாசுப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com