டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தாம் நாடாளுமன்ற சிறப்பு அறையிலிருந்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியேற்றப்பட்டதாக கூறினார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவாதத்தில் தமது பேச்சை தொடங்குவதற்கு முன்னதாகவே தம்மை அவைத் தலைவர் வெளியேற்றியதாக லிம் கூறினார்.
“நிலை ஆணைகள் விதி 17 இன் கீழ் நான் எனது சிறப்பு முன்மொழிதலை வைப்பதற்கு முன்பாகவே நான் பண்டிகாரால் விரட்டப்பட்டேன்.
“நான் பேச தொடங்குவதற்கு முன்பே, பண்டிகார் என்னை உட்காரும்படி கூறி விட்டு என்னை திட்ட ஆரம்பித்து விட்டார்.
“நான் நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டத்தின் வழி அவரை கேலி செய்து விட்டதாக கூறினார். கடைசியாக நான் விடுத்த செய்தி அறிக்கை நீதிபதி முன்னிலையில் (sub judice) பற்றியதாகும்’, என்று லிம் நாடாமன்ற முகப்பு அறையில் இன்று கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு அவமானம்
அவைத் தலைவரும் தாமும் உரத்த குரலில் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறிய லிம், “அவர் என்னைத் திட்டுவதை நிறுத்துவதற்கு முன்பு, நான் எழுந்து நின்று அவருடன் வாதிட்டேன். என்னைத் திட்ட வேண்டாம் என்று கூறினேன். எனது பேச்சை முடிக்க விடுங்கள் என்றேன். திரும்பவும் அவர் தொடங்கி விட்டார். அதற்குப்பின்னர், நான் அவரை நாடாளுமன்றத்திற்கு அவமானம் என்று கூறினேன்.
“பின்னர், நான் வெளிநடப்பு செய்வதற்கு முன் அவர் என்னைப் பார்த்து கத்தினார். நானும் திரும்ப கத்தினேன். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆனால் நீர் எம்ஒ1- றால் நியமிக்கப்பட்டவர்.
“பிறகு, அவர் என்னைப் பார்த்து மீண்டும் கத்தினார். ஆகையால் நான் வெளிநடப்பு செய்தேன்”, என்று லிம் மேலும் கூறினார்.
நாடுளுமன்ற அவைத்தலைவரை ஜனநாயக ரீதியில் பொது மக்கள் தேர்வு செய்யும் தீர்மமானத்தை பொது மக்கள் பேரரசர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அமமாம் ம் இ கா உதவித்தலைவர் ஒரு வர நாடாளுன்ற அவைத்தலைவரானார் என்ன ஆச்சி?
Pon Rangan ! மஇகா உதவித்தலைவர் ஒருவர் நாடாளுன்ற அவைத்தலைவரானார் என்ன ஆச்சி? என்று கேள்விக்குறியோடு பார்த்ததும் முன்னால் மஇகா உதவித்தலைவர் ஒருவர் துணை அவைத்தலைவராகி கிளுகிளுப்பு மூட்டியது ஞாபகத்திற்கு வந்தது.
என்ன இந்த பழைய கதையை கிளறினால் திரு. கர்பால் சிங்கை மறுபடியும் கூப்பிட வேண்டி வரும் அவருக்குதான் தெரியும் எல்லா கதையும். ஆன்டவ : சிரிப்பாபாய் சிரித்தது அவைத்தலைவரை கூத்தும் பாட்டும்.
அவைத்தலைவனா அவன்? இவனுக்கெல்லாம் எப்படி மரியாதை கொடுக்க முடியும்? நீதி நியாயம் தெரிந்தவனாக இருந்தால் பரவாயில்லை– சப்பிகளுக்கு – மூளை எங்கிருக்கிறது என்று நான் கூற தேவை இல்லை.