சுல்தானா அமினா மருத்துவமனை( எச்எஸ்ஏ)யின் அவசரச் சிகிச்சைப் பிரிவு இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுகிறது.
மருத்துவமனையின் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள அவசரப் பிரிவு நேற்று தொடங்கிக் கட்டங்கட்டமாக மூடப்பட்டு வருகிறது.
“மறு அறிவிப்பு வரை சுல்தானா அமினா மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மூடப்படுகிறது. அவசரத்துக்கு, தயவு செய்து அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது மருந்தகத்துக்குச் செல்லுங்கள்”, என்று கூறும் அறிவிக்கை ஒன்று அப்பிரிவில் ஒட்டப்பட்டுள்ளது.