சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் “இரத்தத்தில் அமிழ்த்துவேன்” என்று கூறியிருந்த கருத்துக்காக அவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா அல்லது ஒன்றுமில்லை என்று விட்டுவிடப்படுவாரா என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கேட்கப்பட்டுள்ளார்.
“இரத்தத்தில் அமிழ்த்துவேன்” என்று ஜமால் கூறியிருந்த கருத்துக்காக போலீஸ் அவரை விசாரணைக்காக கைது செய்யுமா என்று ஐஜிபி காலிட்டை கேட்க விரும்புகிறேன் என்று செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அல்லது, முன்பு பெர்சே 5 க்கு எதிராக ஜமால் செய்திருந்த போர் பிரகடனத்தை வெறும் சொற்போர்தான் என்று தட்டிக்கழித்ததை போல் இதுவும் ஜமாலின் சொற்போரைத் தவிர வேறொன்றுமில்லை என்று ஐஜிபி காலிட் கூறுவாரா என்று செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெர்சா கோ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
சாதாரண ஒரு கட்சியின் தொகுதித் தலைவருக்கு, ‘இரத்தத்தில் குளிப்பேன் ‘ என்று கொக்கரிக்கும் அளவிற்கு துணிவிருக்கிறது என்றால், அவர் பின்னால் எந்தவித ‘பெரிய தலைகளும்’ இல்லை என உளறுவதற்கு, நாட்டு மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?