அரசாங்க இரகசியங்களை சமீபத்தில் வெளிப்படுத்தியதாக கூறப்படும் மூன்று முன்னாள் அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறுகிறார்.
“நாங்கள் இவ்விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்னும் இரண்டொரு தினங்களில் அழைக்கப்படுவர்”, என்று தொடர்பு கொண்ட போது அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், முன்னாள் கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகமட் ஷாபி அப்டால் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் II அஹமட் ஹுஸ்னி ஹனாட்ஸ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் நடந்த 2017 பட்ஜெட் விவாதத்தின் போது அரசாங்க இரகசியங்களைக் கசிய விட்டதாக கூறப்படுகிறது.
-பெர்னாமா
அரசாங்க இரகசியங்களை கசிய விட்டதற்காக, மூவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸ் கூறுகிறது. சரி. அதேவேளை கோடிக்கணக்கில் அரசாங்க[மக்கள்] பணத்தை ‘ஏப்பம்’ விட்டவர்கள் மீது {MO1} போலீஸ் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதா?
அரசாங்கத்தின் கொள்கைப்படி 1MDB அல்லது 1 MALAYSIA DALAM BAHAYA என பொருள்பட கூறுவது அரசாங்க இரகசியங்களை கசிய விட்டதாகவும், MO1 பற்றி கேள்வி எழுப்பவர்கள் நாட்டிற்கு எதிராக தேசதூரக செயலில் ஈடுபட்டவர்களாக கருதப்படுவர். அப்படித்தானே INSPECTOR GARBAGE OF POLICE
இது சும்மா ஒரு மிரட்டும் படலம் …. நாளைக்கே ஒன்னு சேர்ந்துக்கிட்டு ஹரி ராயா கொண்டாடுவாய்ங்க ….