ஹுஸ்னி விசாரணைக்காக நாளை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளார்

 

Husnicalledநாடாளுமன்ற மக்கள் அவையில் ஆற்றிய உரை குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் II அஹமட் ஹுஸ்னி புக்கிட் அமானுக்கு நாளை அழைக்கப்பட்டிருக்கிறார்.

நாளை பிற்பகல் மணி 2.30க்கு விசாரிக்கப்படுவதற்காக புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று ஹுஸ்னியின் உதவியாளர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஹுஸ்னி அமைச்சரவையிலிருந்து கடந்த ஜூலையில் விலகினார். ஆனால், அவர் பின் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராக இன்னும் இருந்து வருகிறார்.