இரகசிய காப்பு உறுதிமொழியை மீறினார் என்று கூறப்படுவது தொடர்பில் தம்பூன் எம்பி அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லாமீது விசாரணை நடத்துவது அரசமைப்புக்கு விரோதமானது என்கிறார் எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்.
கூட்டரசு அரசமைப்பின் சட்டப்பிரிவு 63(2), “நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அதன் குழுக்களிலும் கூறப்படும் எதற்காகவும் எவர்மீதும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவியலாது” என்று கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாடாளுமன்ற சட்ட விலக்களிப்புக்கும் விதிவிலக்கு உண்டு என்று குறிப்பிட்ட வான் அசிசா, 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்படும் வழக்குகளில் சட்டவிலக்களிப்பு செல்லாது என்றார்.
“ஒரு விசயம் தெளிவாகத் தெரிகிறது. தம்பூன் எம்பி மட்டுமல்லாது பாகோ எம்பி (முகைதின் யாசின்)யும் சம்பூர்ணா எம்பி(முகம்மட் ஷாபி அப்டால்)யும் 1எம்டிபி பற்றிப் பேசியதற்கும் தேசநிந்தனைச் சட்டத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
“அதிகாரத்துவ இரகசியச் சட்டம் 1972கூட இங்கு பொருந்தாது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தப்படும் இடங்களில் மட்டுமே அது பயன்படும்.
“1எம்டிபியில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதால் அதன்மீதான விவாதங்களைத் தேசிய நலன் சம்பந்தப்பட்ட விவாதங்களாகக் கருத வேண்டும் , அது குறித்து விவாதிக்க இடமளிக்க வேண்டும், குறிப்பாக நாடாளுமன்றத்தில்”, என்று வான் அசிசா ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று ஹுஸ்னி புக்கிட் அமான் போலீசாரால் விசாரிக்கப்பட விருந்தார். ஆனால், விசாரணை பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு தடவை முடிவெடுத்தால் அவனுங்க பேச்சை அவனுங்களே கேட்க மாடடானுங்க,இந்த அம்மா சொல்றதைய கேட்கப் போரானுங்க.
நாடாளுமன்ற அவையில் பேசப்படும் பேச்சுக்கள் மீது எவரும் வழக்குத் தொடர முடியாது. குறிப்பாக, போலீசார் இதில் தலையிடும் அருகதையே இல்லை. ஓர் உதாரணம்: 1981m ஆண்டு. ‘இந்தியனையும் பாம்பையும் கண்டால், முதலில் இந்தியனை அடித்துக் கொல்ல வேண்டும்’, என அன்றைய பாசிர் பூத்தே பாரிசான் உறுப்பினர், வான் நஜிப் என்பவர் நாடாளுமன்ற அவையினுள் பேசினார். உடனே கர்பால் சிங் எழுந்து, ” நீர் ஆண்பிள்ளையானால், உமக்கு துணிச்சல் இருக்குமானால் அவையின் வெளியே கூறிப்பாரும். உம்மை என்ன செய்கிறேன் பார்” என கர்ஜித்தார். கர்ப்பாலோடு பி.பட்டு வும் சேர்ந்துக் கொண்டு, “YB சுங்கை சிப்புட், [சாமிவேலு] உம்மையும் சேர்த்து தான் அவன்[வான் நஜிப்] அப்படி சொல்கிறான்.” என்றார். உடனே, சாமிவேலு எழுந்து, கழிவறைக்கு கிளம்பியதை என் இரண்டு கண்களாலும் அன்று நான் கண்டது.