ஏர் ஏசியா விமான நிறுவனம் நேற்றிரவு கோட்டா பாருவிலிருந்து கோலாலும்பூருக்குப் பயணப்படவிருந்த அதன் ஏகே6443 விமானம் கிளந்தான் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் ஓடுபாதையில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த வழுக்கிக்கொண்டு சென்று விபத்துள்ளானதை உறுதிப்படுத்தியது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என அது அறிவித்தது.
“பயணிகள் கவனிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன”, என்று ஏர் ஏசியா அறிக்கை கூறியது.