தீவிரவாதத்தை எதிர்த்து போராட பிரான்ஸ் அதிரடி திட்டம்!

france_traces_001பிரான்சில் மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு அதிரடி திட்டம் திட்டியுள்ளது.

கடந்த ஆண்டு பிரான்சில் இடம்பெற்ற தொடர் தீவிரவாத தாக்குதல்களினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிரடியாக குறைந்துள்ளது.

இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக அரசாங்க அமைச்சர்கள் சுற்றுலாத் துறை பற்றி கலந்துரையாடினர்.

இதில், சுற்றுலாத்துறைக்காக 40 மில்லியன் யூரோக்கள் ஓதுக்கியுள்ளனர். குறிப்பாக சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்காக 15 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக கூடும் இடங்கள், ஓட்டல்களில் கண்காணிப்பு கமெராக்களை பொருத்தாவும்.

தீவிரவாதிகள் மற்றும் திருடர்களிடமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்காவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முக்கியமான 30 சுற்றுலா தளங்களில் நடமாடும் காவல் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com