அமெரிக்காவில் உள்ள சிறைக்கைதி ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு ரூ.542 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பொலிசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மிச்சிகன் நகரை சேர்ந்த வில்லியம் ஜென்னிங்ஸ்(42) என்ற நபர் கடந்த 2010ம் ஆண்டு சாலையில் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது, காரை வழிமறைத்த பொலிசார் வில்லியமிடம் மது பரிசோதனையை செய்துள்ளனர்.
இந்த பரிசோதனையில் அவர் மது அருந்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பொலிசாரால் கைது செய்யப்பட்ட வில்லியம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், சிறையில் வில்லியம் அடைக்கப்பட்டபோது அவரை பொலிசார் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது, வில்லியமின் பதிலால் ஆத்திரம் அடைந்த 5 பொலிசார் அவரை கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இக்காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
வில்லியம் விடுதலை செய்யப்பட்ட பிறகு தன்னை சிறையில் தாக்கிய குற்றத்திற்காக பொலிசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும், கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் நீதிபதியின் முன் காட்டியுள்ளார்.
பொலிசாரால் தாக்கப்பட்ட வில்லியமிற்கு 16 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பொலிசார் அத்துமீறி அராஜகமாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக இழப்பீட்டு தொகையை இருமடங்காக உயர்த்தி 36.6 மில்லியன் டொலர்(542,50,35,000 இலங்கை ரூபாய்) தொகையை வில்லியமிற்கு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.
-http://news.lankasri.com
https://youtu.be/DgQghugJ6LY