உலகில் காசில்லா பணபரிவர்த்தனை நடைபெறும் 10 நாடுகள் எவை தெரியுமா?

dollarஉலகில் பல நாடுகள் காகிதமில்லா மற்றும் காசில்லா பணபரிவர்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அவற்றில் முதலிடம் வகிக்கும் 10 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

காசில்லா பணபரிவர்த்தனை நடைபெறும் நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் தென்கொரியா உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில், வாடிக்கையாளார்கள் மேற்கொள்ளும் மொத்த பணபரிவர்த்தனைகளில் 70 சதவீதம் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமே நடக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 58 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.

9-வது இடத்தில் ஜேர்மனி உள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜேர்மனியில் 76 சதவீத பணப்பரிவர்த்தனைகள் இணைய உதவியுடனேயே நடக்கிறது. ஜேர்மானியர்களில் 88 சதவீதம் பேர் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர்.

இணையவழி பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ள ஜேர்மனியில், முனிச் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் கண்டுபிடிப்பால் வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெற ஐபோன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சிப் ரீடர் எனப்படும் கருவி இருந்தாலே போதுமானது.

-http://news.lankasri.com