அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் அடுத்த செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் உலக நாடுகள் ஆவலாக காத்திருக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவொன்று ட்ரம்ப் எடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக சர்ச்சைகளுக்கு பெயர் போன வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஸ்டீவன் பன்னோ ((Steve Bannon)) நியமிக்கப்படவுள்ளார்.
ஸ்டீவன் பன்னோன், யூதர்கள், குடியேறிகள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொள்கையை கொண்டவர். டிரம்ப்பை போலவே, இவரது கொள்கைகளும் இருப்பதால் அமெரிக்க சிறுபான்மை மக்கள் அச்சத்திலுள்ளனர்.
ஸ்டீவன் பன்னோன் தேர்தலின் போது டிரம்ப்பின் பிரசாரத்தை வடிவமைத்து தரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இதற்கு முன்பு இருந்த கர்ல் ரோவ் மற்றும் வலெரி ஜர்ரெட் ஆகியோர் சர்ச்சையை சம்பாதித்தவர்கள். ஆனால் அவர்களுக்கு நீண்ட கால கட்சி நடைமுறை, அரசியல் அனுபவம் இருந்தது.
ஆனால், ஸ்டீவன் பன்னோன் ஒரு பத்திரிகைக்காரர். வெள்ளை ஆதிக்க சிந்தனை கொண்ட ஸ்டீவன், ஜனாதிபதி ஆலோசகராவது அமெரிக்காவை எங்கு கொண்டு நிறுத்தும் என தெரியாது என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒபாமா ஆட்சியில் தான் அதிக கறுப்பினத்தவர்கள் பொலிஸாரினால் சுட்டு கொல்லப்பட்டனர். நிலைமை இப்படி மோசமாக இருக்கும்போது ஸ்டீவன் வருகை இதை மேலும் ஆபத்துக்குள்ளாக்கலாம்.
ஸ்டீவனுக்கு அதிரடி தேவை. எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார், பலவீனத்தை வெளியில் காட்ட மாட்டார். தனது வெள்ளை மாளிகை அதிகாரத்தை எதிரிகளை பழி வாங்கவே அவர் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.
-http://www.tamilwin.com

























