அவுஸ்திரேலியாவுக்கு கள்ள படகில் சட்டத்திற்கு புறம்பாக அகதிகள் யாரும் வரக்கூடாது என அந்நாட்டின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் பொற்றெல் எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் இடமளிக்காது என அந்நாட்டு அரசு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது.
மீண்டும் இதே போன்ற எச்சரிக்கை அறிக்கையை அவுஸ்ரேலியா அரசு அதன் தளபதி பொற்றெல் மூலம் விடுத்துள்ளது. அதில், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை யாரும் மீறக் கூடாது.
முன்பை விட அவுஸ்திரேலியாவின் ஏற்பாடுகள் பலமாக உள்ளதால் சட்ட விரோதமாக கள்ள படகில் யார் வந்தாலும் எங்களின் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இது இந்தோனேசியா, மியான்மர், ஈராக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு பொருந்தும் என எச்சரிக்கை அறிக்கையில் உள்ளது
மேலும், சட்ட விரோதமாக படகில் யாராவது வர முயற்சித்தால் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் அவர்கள் கனவு ஒரு போதும் நிறைவேறாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-http://news.lankasri.com