கலகத்தை ஏற்படுத்த முயற்சி: சொந்தப் படையினர் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த ஐ.எஸ்

isis killஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் அமைப்பினரிடையே கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி சொந்தப் படையினர் 15 பேரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதித்துள்ளனர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது ஈராக்கின் மொசூல் நகர். இந்த நகரை கைப்பற்ற ஈராக் கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றனர். இதில் பாதியளவுக்கு ஈராக்கின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே குறித்த பகுதியில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் கூட்டம் கூட்டமாக தலைமறைவாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில பிரிவு மட்டும் மொசூல் நகரை ராணுவத்திடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலொ ஐ.எஸ் அமைப்பினரிடையே கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி இளைஞர்கள் 15 பேரை துப்பாக்கியால் சுட்டு மரன தண்டனை விதித்துள்ளனர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்.

குறித்த கைதிகளை அங்குள்ள பூங்கா முன்பு இழுத்து வந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த இளைஞர்கள் தங்கியிருந்த வீடுகள் 5 எண்ணிக்கையில் நெருப்பு வைத்துள்ளனர். மேலும் 4 வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 16 பேரை கொன்றனர். இதனையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்டு மொசூல் நகரில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மொசூல் நகரை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னர் கடந்த அக்டோபர் 17ஆம் திகதி தொடங்கி குறித்த பகுதியில் இருந்து இதுவரை 73,000 ஈராக்கியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

-http://news.lankasri.com