பழங்குடியின அரசரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்: 55 பேர் படுகொலையால் பதற்றம்

உகாண்டாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினைவாத குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பொலிசார் பழங்குடியின அரசரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

உகாண்டாவில் Kasese நகரில் பழங்குடியின அரசரின் படையினருக்கும் பாதுகாப்பு ரோந்து படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு ஏற்பட்டுள்ளது. இதில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட 14 பொலிசாரும் அரசரின் பாதுகாப்பு படையினர் 41 பேரும் சம்பவயிடத்திலேயே குண்டடிப்பட்டு இறந்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார் பழங்குடியின அரசர் சார்லஸ் வெஸ்லீயிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர் குறித்த சம்பவம் தொடர்பாக ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அரசரின் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த பொலிசார் அவரை கைது செய்ததுடன், அவருடன் இருந்த பாதுகாப்பு படையினரையும் கைது செய்துள்ளனர்.

இதனிடையே குறித்த பழங்குடியின அரசரை தொலைப்பேசியில் அழைத்த ஜனாதிபதி யொவேரி முசவேனி நடந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பாதுகாப்பு படையை கலைத்துவிடவும் உத்தரவிட்டுள்ளார்.

ரோந்து பொலிசாருக்கு எதிராக முதலில் தாக்குதல் நடத்தியது அரசரின் படைகள் என உறுதியான நிலையில் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

-http://news.lankasri.com