5000 மீன்களை உறைய வைத்து காட்சிப்படுத்திய பொழுதுபோக்கு பூங்கா: போராட்டத்தில் குதித்த ஆர்வலர்கள்

ஜப்பானில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் உணவாக்கவேண்டிய மீன்களை உறைய வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜப்பானில் அமைந்துள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா Space World. இங்குள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று பனிச்சறுக்கு விளையாட்டு.

குறித்த பனிச்சறுக்கு விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை சமூக ஆர்வலர்களை போராட்டத்தில் குதிக்க வைத்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பனிச்சறுக்கு மைதானத்தில் விளையாடும் வீரர்களை குஷிப்படுத்தும் வகையில் 5000 மீன்களை உறைய வைத்து தரை தளத்தை மெருகூட்டியுள்ளனர். இது பார்வையளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

பொதுமக்கள் உணவாக்க வேண்டிய மீனை உறைய வைத்து காட்சிப்படுத்துவது பாவச்செயல் என்று கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், குறித்த மைதானத்தை தற்போது உருக வைத்து மீன்களை வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி உறைய வைக்கப்பட்டிருந்த 5000 மீன்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

உணவுக்கு பயன்படுத்த வேண்டிய மீனை விளையாட்டாக கருதியதும் உணவை வீணடித்ததும் கண்டிக்கத்தக்கதுதான் என்று அந்த Space World பொழுதுபோக்கு பூங்காவின் நிர்வாகி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பனிச்சறுக்கு விளையாடுபவர்களுக்கு கடல் போன்ற ஒரு உணர்வை அளிக்க விரும்பியதாகவும், மீன்கள் குறித்து அவர்கள் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதியதாகவும்,

தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து குறித்த பனிச்சறுக்கு மேடை மேலும் செயல்படுவது பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத செயலாகும். அதனால் குறித்த பனிச்சறுக்கு மேடையை தடை செய்துள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளதாக நிர்வாகி கோஜி ஷிபாத்தா தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com