உலகில் செல்வந்தர்கள் மிகுந்த நாடு எது தெரியுமா? உலகின் மிகவும் சோகமான நாடு தெரியுமா?

உலகில் பல்வேறு நாடுகளில் சிறப்பு பெற்றவை எவை என்பது குறித்த வியப்பளிக்கும் பட்டியல் ஒன்று வெளியாகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பட்டியலானது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தரவுகளின் அடிப்படையிலும் உலக கின்னஸ் சாதனை விருது வழங்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலகில் நாவுக்கு சுவை கூட்டும் உணவு வகைகளுக்கு பெயர்போன உணவகங்களை கொண்ட நாடாக ஜப்பான் தெரிவாகியுள்ளது. செல்வந்தர்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டுமா எனில் பிரித்தானியாவே முதன்மை தெரிவாக இருக்கட்டும் என்கிறது குறித்த பட்டியல்.

மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த மதுவகைகளை ருசிக்க வேண்டுமா, உடனே பிரான்ஸ் பக்கம் செல்லுங்கள் என்கிறது பட்டியல். மட்டுமின்றி பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அதிகம் கொண்ட நாடாக கனடா உள்ளது

ஒரே பாலின ஆபாச சித்திரங்களை அதிகம் கண்டு ரசிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. உலகில் அதிக மரணங்கள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தை தென்னாப்பிரிக்கா நாடு கொண்டுள்ளது. அதேபோன்று ஸ்பாம் மின்னஞ்சல்களுக்கு பெயர்போன நாடாக அமெரிக்கா உள்ளது.

உலகில் அதிவேக Wi-Fi இயங்கும் நாடாக லிதுவேனியா உள்ளது. இங்குள்ள மக்கள் தொகை வெறும் 35 லட்சம். Dashcam பயன்பாட்டில் ரஷ்யாவை மிஞ்ச ஆளில்லை என குறித்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோன்று டுவிட்டர் தணிக்கையில் முன்னணியில் இருக்கும் நாடு துருக்கி எனவும், உலகில் அதிக அளவு இணையம் வழி திருட்டு நடைபெறும் நாடாக அவுஸ்திரேலியா உள்ளது எனவும், இங்குள்ள மக்கள் அடிக்கடி தங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காபி பிரியர்களின் சொர்கமாக நெதர்லாந்து இருப்பதாக கூறும் பட்டியல், சிறந்த பீட்சா உணவுக்கு நோர்வே தான் சிறந்த தெரிவு என கூறுகிறது.

மேலும், படுகொலைகள் அதிகம் நிகழும் நாடாக அங்கோலா உள்ளது. உலகின் மிகவும் சோகமான நாடாக டோகா உள்ளது. அதேபோன்று அதிகம் மது அருந்துவோர் கொண்ட நாடாக பெலாரஸ் முதலிடம் வகிக்கின்றது.

-http://news.lankasri.com