அடிமைத்தனத்தை குறிக்கும் உயரிய விருது: பாகிஸ்தான் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

pakistan_nawaz_sharifபிரித்தானிய நாட்டின் உயரிய விருதான சர் விருதை, அந்நாட்டு அரசு பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பிரதமராக உள்ள நவாஸ் செரீப்புக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு வழங்கி கெளரவப்படுத்தியது.

இந்நிலையில் ஜாவேத் இக்பால் ஜஃபாரி என்பவர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நீதிமன்றத்தில், நவாஸ் செரீப் பிரித்தானிய நாட்டின் உயரிய விருதான சர் விருதைப் பெற்றுள்ளார். அந்த விருது அடிமைத்தனத்தைக் குறிக்கிறது என்றும் பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு எதிராகவும் இருக்கிறது முறையிட்டுள்ளார். இதனால் அந்த விருதை அவர் பிரித்தானிய அரசிடமே திருப்பியளிக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் அந்த மனுவில் பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின் 2-ஏ மற்றும் 249-ஆம் பிரிவுகளை மீறி, பிரிட்டனின் விருதை நவாஸ் ஷெரீப் பெற்றுக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அது தொடர்பான மனுவும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவ்விருது பெற்றதற்கான காரணத்தை விளக்கும் படி நவாஸ் ஷெரீப்புக்கு உததரவிட்டுள்ளது.

ஆனால் அவர் இதற்கு பதில் அளிப்பதை பலமுறை ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது, நவாஸின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நதீம் அஞ்சும், இந்த மனுவுக்கு பதிலளிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நீதிபதி, மனுவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நவாஸ் ஷெரீஃப் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 19-ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

-http://news.lankasri.com