சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் இருந்து தப்பிக்க அந்நாட்டு விட்டு வெளியேறும் மக்களின் உருக்கமான காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிரியாவில் உள்ள உள்நாட்டு போராளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக யுத்தம் ஏற்பட்டு வருகிறது.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்டு வரும் இந்த யுத்தத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
மேலும், யுத்தத்தில் இருந்து தப்பிக்க சிரியா குடிமக்கள் நாள் தோறும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு அலப்போ நகரை சேர்ந்த குடிமக்கள் தற்போது சிரியாவை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.
மேலும், தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக கூடாது என அந்நாட்டு ராணுவம் தனது யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதற்கு இடைப்பட்ட நாட்களில் சிரியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அலப்போ நகரை சுற்றி ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானம் மூலம் அண்மையில் வீடியோ காட்சி எடுக்கப்பட்டது. இதில், யுத்தத்திற்கு அச்சப்பட்டு பொதுமக்கள் வரிசையாக வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 50,000 இந்நகரை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
-http://news.lankasri.com
https://youtu.be/M36Dcf6ykI4