பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்!

child_refugee_001பிரான்சின் காலிஸ் அகதிகள் முகாமில் இருந்து பிரித்தானியா நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகள், கடத்தல்காரர்களின் மூலம் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காலிஸ் முகாமில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளை பிரித்தானிய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பிரான்ஸ் நாடு வலியுறுத்தியுள்ளது.

இதன் முடிவாக காலிஸ் முகாமில் இருந்து குறிப்பிட்ட அகதிகள் அரச பாதுகாப்போடு பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதில் கடந்த அக்டோபர் மாதம் 750 குழந்தைகள் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் பிரித்தானியாவை தஞ்சம் அடைந்த குழந்தைகளில் பலர் காணாமல்போயுள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதாவது, பிரித்தானியாவை சேர்ந்த கடத்தல்காரர்கள் இணையதளம் வாயிலாக அகதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுகின்றனர்.

போரில் தொலைத்த உங்களின் குடும்பத்தினரை பற்றி எங்களுக்கு தெரியும், அவர்களை பார்க்க வேண்டுமா? என்று கூறும் அவர்களின் வார்த்தைகளை நம்பி குழந்தைகளும் அவர்களிடம் சரணடைகின்றனர்.

இதனை பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல்காரர்கள், அக்குழந்தைகளை பிரித்தானியாவில் உள்ள கடைகளில் அடிமைத் தொழிலாளர்களாவும், பல குழந்தைகளை பாலியல் தொழிலுக்கும் உட்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கூட காலிஸ் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் பிரித்தானியாவில் பாலியல் தொழிலாளியாக இருந்தது பொலிசாரல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த Ecpat என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளியியல் தகவலில், கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 513 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

ஆனால் இவர்கள் அனைவரும் காணாமல் போனதற்கு கடத்தல்காரர்களே காரணம் என கூறிவிட இயலாது.

மாறாக பிரித்தானியாவில் வசித்து வரும் தங்கள் உறவினர்களிடம் சென்று இவர் அடைக்கலம் ஆகியிருக்கலாம் என கூறியுள்ளது.

இருப்பினும் குழந்தைகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியான ஒரு விடயம் என்றபோதிலும் பிரித்தானிய பொலிசார் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com