வெறும் மைதா மா திருடியதற்காக கைகள் வெட்டப்பட்ட சகோதரர்கள் இவர்கள் தான்

ஈராக்கில் உள்ள மொசூல் நகரை ஒரு காலத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது பிடியில் வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அங்கே செய்யாத அட்டகாசமே கிடையாது எனலாம். பலரை சுட்டுக் கொன்றார்கள். திருடர்களுக்கு கடும் தண்டனைகளை கொடுத்தார்கள். அசாட் ஹசன் என்னும் சகோதரர்கள் உணவு பஞ்சம் காரணமாகவும். தமது வீட்டில் தங்கை உணவின்றி  இருப்பத்தை பார்த்தும் வெறும் மைதா மாவை திருடியுள்ளார்கள்.

ஆனால் மைதா மாவு தமது எனவும், நீங்கள் எங்களிடமே திருடுகிறீர்களா என்று சொல்லி அவர்களது கைகளை வெட்டியுள்ளார்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். ஆனால் மொசூல் நகரில் உள்ள பல சிறுமிகளை பிடித்து அவர்களோடு பாலியல் வல்லுறவு மேற்கொண்டு அவர்களை கர்ப்பமாக்கியும் உள்ளார்கள். இது தவறு இல்லையாம். ஆனால் பசிக்காக மா திருடுவது பெரும் குற்றம் என்கிறார்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

தற்போது ஈராக் படைகள் அன் நகரை மீட்டு மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளார்கள்.

-http://www.athirvu.com