பிலப்பைன்ஸை ஒட்டிய கடற்பகுதியில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை சீனா சிறைப்பிடித்தது.
இதை அமெரிக்காவிடம் திரும்ப ஒப்படைக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வருங்கால ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், சீனா திருடிவிட்டதாகவும், அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் எனவும் காட்டமாக டுவிட் செய்திருந்தார்.
இதற்கிடையே சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ்-ல் அமெரிக்காவை எச்சரிக்கும் விதத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், ஜனாதிபதிக்கு உரிய பதவிகள் டிரம்ப்பிடம் இல்லை, அமெரிக்காவை வழிநடத்தும் திறன் அவரிடம் இல்லை.
அமெரிக்க கடற்படைகூட திருட்டு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, ஆனால் டிரம்ப் அப்படி கூறுகிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகும் டிரம்ப் இப்படி நடந்து கொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
-http://news.lankasri.com