கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் நிதி ஒதிக்கீடுகள் குறைக்கப்பட்டதால் சீனமொழிப்பள்ளிகளின் இவ்வாண்டுக்கான பாராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனிலிருந்து அளிக்கப்படும் நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சைனா பிரஸ் செய்தியின்படி, கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் இதை உறுதிப்படுத்தினார்.
இவ்விவகாரம் இம்மாத இறுதிக்குள் தீர்க்கப்படலாம் என்று கூறிய அமைச்சர், அது தீர்க்கப்படவில்லை என்றால் (மாத இறுதிக்குள்), கிடைப்பதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாரவர்.
சீனமொழி தொடக்கப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்தச் சிறப்பு ரிம50 மில்லியன் நிதியிலிருந்து அப்பள்ளிகள் நிதி பெற இயலவில்லயா என்று கேட்டதற்கு, அமைச்சர் “ஆம்” என்று பதிலளித்தார்.
சைனா பிரஸின் காலைப் பதிப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சீனமொழி தொடக்கப்பள்ளிகள் சல்லிக்காசு கூட பெற இயலவில்லை என்று கூறியிருந்தது.