நண்பேன்டா மீனுடன் ஜில் சந்திப்பு! 25 ஆண்டுகளாக தொடரும் உன்னத பந்தம்

fishஜப்பானின் டட்யாமா வளைகுடா பகுதியில் ஹிரோயுகி அரகாவா என்பவரும் மிகப் பெரிய மீனுமான யோரிகோவும் அடிக்கடி சந்தித்து முத்தமிட்டுக் கொள்கின்றனர்.

அதுவும் 25 ஆண்டுகளாக…ஆம் இது உண்மை தான் இவர்களை போன்ற உன்னத நண்பர்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்ன?

ஒவ்வொரு முறை கடலுக்குள் வரும் போது இரும்பு இயந்திரம் ஒன்றி்ன் மீது சுத்தியலால் தட்டுவாராம் ஹிரோயுகி.

இந்த சத்தத்தை கேட்டு துள்ளிக் குதித்து வரும் யோரிகோவுடன் விளையாடி மகிழ்வாரம், தலையை வருடிக்கொடுத்து அன்புடன் முத்தமிட்டு கொள்வார்களாம்.

இத்தனை ஆண்டுகளில் நான் எப்போது கூப்பிட்டாலும் யோரிகோ வந்துவிடும் என நெகிழும் ஹிரோயுகி, இவனை போன்ற உற்ற தோழனை மனிதரில் கூட கண்டதில்லை என தெரிவிக்கிறார்.

-http://news.lankasri.com

https://youtu.be/c7sydF21eEc