அழிந்து போனதாக கருதப்பட்ட வானர மனிதர்கள் அமேசன் வனத்தில்!!

பிரேசில் நாட்டின் அமேசன் வனப் பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பகுதி ஒன்றில் இதுவரை அடையாளம் காணப்படாத பழங்குடியினர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் விமானம் மூலம் கண்காணிப்பில் ஈடுபட சென்றிருந்த விஞ்ஞானிகள் குழு ஹெலிக்கொப்டரில் இருந்தவாறு இந்த பழங்குடியினரை கண்காணித்துள்ளனர்.

தற்போதைய நவநாகரீக மனிதனின் கலாச்சாரத்தை அறியாது, ஆடை அணியாது 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களை போல் இவர்கள் காணப்படுவதாக ஆய்வுடன் தொடர்புடைய புகைப்படப் பிடிப்பாளர் ரிக்கார்டோ ஸ்டக்கேர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த பழங்குடி மக்களின் சிலர் மனிதர்களுக்கு இணையாக இருப்பதுடன் மேலும் சிலர் வானர மனிதனுக்கு இணையானவர்களாக காணப்படுகின்றனர் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளுடன் இணைந்து காணப்படும் அமேசன் வனமானது இலங்கையை போன்று 100 மடங்கு பரப்பளவை கொண்ட மிகப் பெரிய வனமாகும். இந்த வனத்தில் 10 வீதத்திற்கும் குறைவான பகுதிகளே ஆயவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

காட்டின் மற்றைய பகுதிகளில் உலகில் அழிந்து போனதாக கருதப்படும் பிராக் மனித இனத்தவர்கள் வாழக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வை மேற்கொண்ட குழுவினர் பயணித்த ஹெலிக்கொப்டர் மீது பண்டைய கால ஆயுதங்களை பயன்படுத்தியே பழங்குடியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

-http://www.tamilwin.com