அதிரடி காட்டிய ஒபாமா…! 72 மணி நேர காலக்கெடு..! அதிர்ச்சியில் ரஷ்யா…!

obama_putin_001ரஷ்ய நாட்டை சேர்ந்த 35 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதுடன், குறித்த அனைவரையும் 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார்.

ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் இணையவழி மோசடிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் உளவு இரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எட்வர்ட் ஸ்னோடன் இந்த விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், எட்வர்ட் ஸ்னோடன் கூறியுள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து 35 அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரையும் அவர்களின் குடும்பத்தினருடன், 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com