ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை வழங்க முடியாது: இஸ்லாமிய அமைப்பு அதிரடி!

நைஜீரியா நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை அந்நாட்டு தலைமை இஸ்லாமிய அமைப்பு நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் சம அளவில் உள்ளனர்.

மதக் கொள்கைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும் அந்நாட்டில் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு அளிப்பதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய குற்றச்சாட்டாகும்.

இது தொடர்பாக இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன் தினம் பாலின சட்ட மசோதா(gender equality bill) கொண்டு வரப்பட்டது.

கிறித்துவ மதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதால் கிறித்துவர்கள் இந்த சட்ட மசோதாவை வரவேற்றனர்.

ஆனால், நைஜீரியா நாட்டின் தலைமை இஸ்லாமிய அமைப்பு இந்த சட்ட மசோதாவை அதிரடியாக நிராகரித்துள்ளது.

இது குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவரான Mohamed Sa’ad Abubakar பேசியபோது, ‘ஆண்களுக்கு அதிகளவில் சொத்தில் பங்களிக்கும் இஸ்லாமிய கொள்கைகளை நாங்கள் மீற முடியாது.

இஸ்லாமிய கொள்கைகளில் ஆண்களுக்கு தான் அதிகளவில் சொத்தில் பங்கு உள்ளது. எனவே, இந்த வரையறையை மீறி சட்ட மசோதாவை ஆதரிக்க முடியாது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com