பிலிப்பைன்ஸ் நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அன் நாட்டு அதிபர், றொற்றிகோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் பொலிசார் பல ஆயிரக்கணக்கான போதைபொருள் டீலர்களை ஈவு இரக்கம் இன்றி போட்டு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணில் கண்ட பல பாதாள குழுக்களை எந்த ஒரு கேள்வியும் இன்றி போட்டு தள்ளுமாறு அதிபர் மறைமுக உத்தரவிட்டார். இதற்கு அமைவாக நாளாந்தம் தெருக்களில் எல்லாம் பிணக்குவியல் தான் மிஞ்சியது.
இதேவேளை உகல நாடுகளில் பலத்த கண்டனத்திற்கு மத்தியில் அவர் இவ்வாறு நடந்துகொண்டார். தற்போது சுமார் 9 லட்சம் போதைக்கு அடிமையான மக்கள் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு போதைப் பொருள் கிடைப்பதில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாத அவர்கள் பொலிசாரிடம் சரணடைந்த நிலையில். பெரும் முகாம்களை அமைத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அன் நாட்டு அரசு முயன்று வருகிறது.
சுமார் 6,000 படுகொலைகளுக்கு பின்னர் தற்போது பிலிப்பைன்ஸ் என்னும் நாடு மிகவும் பாதுகாப்பாக வந்துவிட்டதாக றொற்றிகோ இன்று தெரிவித்துள்ளார்.
-http://www.athirvu.com