பூக்களால் மரணம் நேரிடும் அபாயம்! நம்பவா முடிகிறது..? இது தான் உண்மை….

மலர்கள் என்றாலே மங்கை கூட மயங்கிபோவாள். இவ்வாறு இயற்கை அழகையும் மன மகிழ்வையும் தரகூடிய மலர்களிலும் ஆபத்து இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

மலர்கள் மனதை கவரக்கூடியதாக இருந்தாலும், உயிரையே பறிக்கும் தன்மை கொண்டதாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் உலகில் உள்ள சில பூக்கள் மனித உயிருக்கு ஆபத்தாகி வருகின்றது. அவ்வாறான பூக்களின் தொகுப்பே இது,

01.கால்மியா லாடிஃபோலியா (Kalmia Latifolia)

அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனக்டிகட் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த பூக்கள் காணப்படுகின்றது.

வெள்ளை மற்றும் ரோஸ் நிறங்களை கொண்ட இப்பூக்கள் கொடிய விஷத்தன்மையை கொண்டது.

இதனை நுகர்ந்தலோ அல்லது பறித்து வாயில் போட்டாலோ வாந்தி, மரடைப்பு, கோமா என பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.

அத்துடன் பூவில் தேன் குடிக்கும் தேனீ சேமித்து வைக்கும் தேனை சாப்பிட்டால் மரணம் ஏற்படும்.

02.ஓனாதே க்ரோகாடா (Oenanthe Crocata)

இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகம் காணக்கூடிய பூக்கள் இவை தான்.

ஈரமான பகுதிகளில் வளர்வதுடன் இதனை சாப்பிட்டால் மூளை மயங்கி போதை ஏற்படும்.

இதனால் 70 சதவீதம் மரணம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

 

 

ஆப்பிரிக்கா கண்டத்தில் வளரக்கூடியவை.

கொடிய விஷத்தன்மையை கொண்டதும். ஆதிவாசிகள் அம்புகளின் நுனியில் இப்பூக்களின் விஷத்தைத் தடவி விலங்குகள் மீது எய்துவதற்கு பயன்படுவர்.

 

 

04.சங்குனாரியா கனாடெனிசிஸ் (Sanguinaria Canadensis)

இப்பூக்கள் தோலில் உள்ள செல்களை கொள்ளும் அளவுக்கு அபாயகரமானது.

கர்ப்பமான பெண்கள் இதை நுகர்ந்தால் தாய்மை நிலை கேள்விகுறியாகி விடும்.

 

 

05. செர்பெரா ஒடொல்லம் (Cerbera odollam)

இதன் வாழ்விடம் இந்தியா. ‘சைலன்ட் கில்லர்‘சைலன்ட் கில்லர் என அழைக்கப்படுகின்ற இப்பூ விஷத்தன்மை கொண்டது.

இந்த பூவின் விஷம் உடலில் கலந்திருப்பது கண்டுப்பிடிப்பதற்கு கடினம்.

 

 

06.கோல்கியம் ஆடம்னேல் (Colchicum Autumnale)

இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வளரும்.

இதை நிறைய சாப்பிட்டால் மரணம் ஏற்படும்.

உடலில் உள்ள பாகங்கள் செயழிக்க தொடங்கி விடும்.

 

 

07.கேஸ்டர் செடி (Castor plants)

இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கபெறும் பூக்கள்.

ஆமணக்கு எண்ணெய் இந்த செடியிலிருந்து செய்யப்படுகின்றது.

இந்த பூக்கள் விஷத்தன்மையை கொண்டது.

விதைகளைச் சாப்பிட்டால் மரணம் நேரிட வாய்ப்பு உண்டு.

கின்னஸ் உலக சாதனைப் பட்டியல் நூலில் அதிக விஷமுடைய செடி என பெயர் பெற்ற பூவும் இதுவே.

 

 

08.ஏஞ்சல் ட்ரம்பெட் (Angel Trumpet)

தென்னமெரிக்கக் காடுகளில் அதிகம் காணப்படும்.

ட்ரம்பெட் இசைக்கருவி வடிவில் அமைய பெற்றது.

கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பூக்கள் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

09.டெத் காமாஸ் (Death Camas)

இரு வகையை கொண்ட இப்பூக்கள் ஒருவரை மரண தருவாயில் அமர்த்தி விடும்.

இதன் முதலாவது வகை சாப்பிடக்கூடிய எடிபிள் காமாஸ் என பெயர் கொண்டதும் இரண்டாவது டெத் காமாஸ் என பெயர்களை பெற்றவையும் ஆகும்.

இதனை அடையாளம் காணுவது கடினம்.

 

-http://www.tamilwin.com