அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றதற்கு ரஷ்யாவின் தலையீடே காரணம் என ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதனை மறுத்த ரஷ்யா ஜனாதிபதி புடின், அவர் தோற்றுவிட்டு என்னை காரணம் சொல்வதாக என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி ஒபாமாவிடமும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது உண்மை தான்.
ஆனால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தினார்களா என்பதை சரியாக கூறமுடியவில்லை. அமெரிக்காவுக்கு ரஷ்யா அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த விரிவான அறிக்கை குறித்து ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பிடம் விளக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com