ஒன்றிணைந்த சீனாவுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்குமானால் பழிவாங்க தயங்க மாட்டோம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.
தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது, ஆனால் அவர்களோ தனி நாடு என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தைவானின் ஜனாதிபதியான சாங் இன் வென் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஹீஸ்டன் விமான நிலையம் சென்றவர் டெக்சாஸ் மாகாண ஆளுநரை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ், ஒன்றிணைந்த சீனாவை அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் டிரம்போ எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் அமெரிக்காவை பழிவாங்குவோம் என எச்சரித்துள்ளது.
இதற்கு முன்பாக தைவானின் ஜனாதிபதி சாங் இங் வென்னை தொடர்பு கொண்டு, டொனால்ட் டிரம்ப் பேசியதை சீனா கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com