வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் புர்கா தயாரிப்பு மற்று இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொராக்கோ நாட்டில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும், அவர்களிடம் உல்ல புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று கடந்த திங்கள் கிழமை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்நாட்டைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி ஒருவர், இது பாதுகாப்பு பிரச்சனைக்காகவே இது போன்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் கொள்ளையர்கள் குற்றச்செயல்களை புரிவதற்கு புர்காக்களை பயன்படுத்தியுள்ளதாக உள் துறை அமைச்சகத்திற்கு செய்தி சென்றுள்ளது, இதன் காரணமாகவே இது தடை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் புர்கா, மொராக்கோவில் பரவலாக அணியப்படுவதில்லை. அங்குள்ள பெண்கள் முகத்தை மறைக்காத ஹிஜாபையே அதிகம் விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. புர்கா தடை செய்யப்பட்ட தகவல் வெளியானதால் அந்நாட்டில் முரண்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
புர்காவை தடை செய்வது, மொராக்கோவின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மீறும்செயல் என்று எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது குறித்து தேசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசின் முடிவு தன்னிச்சையானது என்றும் அது பெண்களின் கருத்துரிமையில் நேரடியாக தலையிடுகிறது என கூறியுள்ளது.
மேலும் அவர்கள் தமது மதம், அரசியல் மற்றும் சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் உடை அணிவதற்கு உரிமை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டின் ஆறாவது மன்னரான Mohammed மிதவாத இஸ்லாமத்தையே ஆதரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
-http://news.lankasri.com