மனதை உருக்கும் உலக அடிமைகள் பற்றிய சில தகவல்கள்

slaveஅடிமைத்தனம் என்ற வார்த்தை இன்று வரை உலகில் அழிக்கப்படாத ஒன்றாகிவிட்டது.

பண்டைய காலம் முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே போதும், மிருகத்தனமும், ஒடுக்குமுறைகளும் தான் நம் மனத்திரையில் ஓடும்.

பத்தே வயதுடைய கான்ஜி தன் எஜமானர்களின் கால்நடைகளை தினம் தினம் மேய்க்கிறான்.

கடுகடுப்பான அந்த எஜமானர்களோ அவனை எப்போதும் அடித்து நொறுக்குகிறார்கள். “எனக்கு யோகம் இருந்தால் ஒரு பழைய ரொட்டித் துண்டு கிடைக்கும். இல்லையென்றால் அந்த நாள் பூராவும் பட்டினிதான்” என அவன் கூறுகிறான். “எனக்கு சம்பளமே கொடுத்தது கிடையாது, ஏனென்றால் நான்தான் அவர்களுடைய அடிமையும் சொத்துமாச்சே. . . . என் வயசு பிள்ளைகள் மற்ற பிள்ளைகளோடு ஓடியாடி விளையாடுகிறார்கள். நான் இப்படி பயந்து பயந்து வாழ்வதைவிட சாவதே மேல்.”

கான்ஜியைப் போல இன்றைய அடிமைகளில் பெரும்பாலோர் பிள்ளைகள் அல்லது பெண்களே. தங்களுடைய விருப்பத்திற்கு எதிராக அவர்கள் மாடாக உழைக்கிறார்கள்; ஜமுக்காளங்கள் நெய்கிறார்கள், சாலைகள் அமைக்கிறார்கள், கரும்பு வெட்டுகிறார்கள், ஏன், விலைமாதராகவும் வேலை செய்கிறார்களே.

அவர்கள் வெறும் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்படலாம். அடைக்க முடியாத கடனை அடைப்பதற்காக, சில குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரே அடிமைகளாக விற்றுவிடுகிறார்கள்.

அடிமைத்தனம் பற்றி சில தகவல்கள் இதோ,

அடிமைத்தனத்தில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான். 1790 லேயே பெஞ்சமின் பிராங்க்ளின் அடிமைத்தனத்தை அழிக்க வேண்டும் என நினைத்தார்.

ஆனால், இன்றுவரை அடிமைத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்காவின் முதல் அடிமைகள் தலைவன் ஒரு கருப்பு அமெரிக்கர். அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி அடிமைகளால் கட்டப்பட்டது.

பிரமிடுகள் கூலி ஆட்களை வைத்து தான் கட்டப்பட்டதே தவிர, அடிமைகளை வைத்து அல்ல, என்ற கூற்று ஒன்றும் இருக்கிறது.

பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம தேசங்களில் அடிமைகள் உப்புக் கொடுத்து வாங்கப்பட்டனர்.

ரோமாபுரியில் அடிமைகள் கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதற்கு பதிலாக, பல தலைவர்கள் போனஸ் கொடுத்து அதிக வேலையை வாங்கினர்.

தற்போது கூட, பல்வேறு தொழிற்சாலைகளில் போனஸ் என்பது நடைமுறையில் உள்ளது.

-http://news.lankasri.com