அரசாங்கத்தில் மாற்றம் நிகழ இதுவே சரியான தருணம் என்றுரைத்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், 14வது பொதுத் தேர்தலில் எதிரணி தோற்கும் என்ற அரசியல் கணிப்பாளர்களின் ஆருடங்களைப் புறந்தள்ளினார்.
அரசியல் ஆய்வாளர்கள் இதே கருத்தைத்தான் 2008-இலும், 2013-இலும் தெரிவித்தார்கள் என்று அன்வார் கூறினார். அவர் இன்று ஒரு வழக்குகாக நீதிமன்றம் வந்திருந்தபோது கிடைத்த நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“எதிரணியிடம் அதற்கான ஆற்றல் உண்டு. எல்லாருமே சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இப்போதே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகளைத் தொடங்க வேண்டும்.
“மாற்றத்துக்குச் சரியான நேரம் இதுதான். (இப்போதைய அரசாங்கத்தின்) தவறுகள் தொடர்வதற்கு இடம் கொடுப்போமானால் அது பெரும் துயரமாக முடியும்”, என்றாரவர்.