கூட்டரசு நீதிமன்றம், 2012 பேரணியின்போது நிகழ்ந்த சேதங்களுக்கு பெர்சே அமைப்பிடமிருந்து இழப்பீடு பெற அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம் அம்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததன் மூலம், அமைதிச் சட்டம் 2012-இன்கீழ் பேரணிக்குப் பின்பு இழப்பீடு கோரும் உரிமை அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் கிடையாது என்று கடந்த ஆக்ஸ்ட் மாதம் முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை நிலைநிறுத்தியது.
முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் செய்திருந்த மேல்முறையீட்டை சாபா சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சும் தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் விசாரித்தனர்.
நீதிபதி ஹசான் லா, நீதிபதி அபு சமா நோர்டின் ஆகியோர் மற்ற இரு நீதிபதிகளாவர்.
முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் குழு செலவுத் தொகை கொடுக்கும்படி உத்தரவிடவில்லை.
இந்த அம்னோ நாதாரிகள் எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடக்கின்றனர்– நீதி துறையும் அவன்களுக்கு துணை போய் கொண்டும் இருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்பு அதிசயம் தான்.