வாஷிங்டனில் பெரும் பதற்றம்..! விஷேட அதிரடிப்படையினர் குவிப்பு..! 100க்கும் மேற்பட்டவர்கள் கைது..!

Donald Trumpஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் வெடித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் இருந்த பொலிஸாரின் வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டகார்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, பெப்பர் ஸ்பெரெ வீசி பொலிஸார் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்துள்ளனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். இவர் தெரிவு செய்யப்பட்டது அமெரிக்க மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவாவதற்கு ரஷ்யா உதவி. மற்றும் வாக்கு எண்ணிக்கை மோசடி என பல குற்றங்கள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் தலைதூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com