தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் Ecuador என்னும் பகுதியில் அமேசன் வகை காடுகள் அதிகளவில் உள்ளது. இந்த காட்டுப்பகுதிகளில் பழங்குடியினர் பலர் வசித்து வருகிறார்கள்.
இங்கு வசிக்கும் காட்டுவாசி பழங்குடியினரை அவர்கள் இடத்துக்கே சென்று சந்தித்து புகைப்படங்கள் எடுத்து வந்துள்ளார் பிரித்தானியா நாட்டின் Devon கவுண்டியை சேர்ந்த Pete Oxford (58) என்னும் புகைப்படக் கலைஞர்!.
Pete கூறுகையில், இங்கு வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வெளியுலகை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
உடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் இவர்கள் தங்கள் மூதாதையர்களின் பழக்க வழக்கங்களை தான் இன்னும் பின்பற்றி வருகிறார்கள்.
வேட்டையாடுவது தான் இவர்களின் வாடிக்கையான விடயமாக உள்ளது. குரங்குகள், பறவைகள், பன்றிகள் போன்றவற்றை இவர்கள் வேட்டையாடுகிறார்கள்.
இங்கு வசிக்கும் பெண்கள் காய்கறிகளை காட்டு பகுதிகளில் இருந்து எடுத்து கொண்டு போய் மிருகங்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.
இது போல காட்டுவாசி பழங்குடியினர் 4000 பேர் வரை இங்கு வசிக்கிறார்கள் என Pete கூறுகிறார் .
-http://news.lankasri.com