நைஜீரியா நாட்டில் அடுத்த 12 மாதங்களில் மட்டும் பசி பட்டிணியால் 90,000 சிறுவர்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறுவர் முகமை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நைஜீரிய நாட்டில் பசி பட்டிணியால் ஆயிரக்கணக்கிலான சிறுவர்கள் உயிரிழக்கும் அபாய கட்டத்தில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறுவர்கள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் கூட இதுவரை எந்த வள்ர்ந்த நாடுகளாலும் நிதி உதவி அளிக்கப்படாத ஒரு நாடாக நைஜீரிய இருந்து வருகின்றனது. இதற்கு முக்கிய காரணமாக அங்குள்ள பயங்கரவாத அமைப்பான போக்கோ ஹராம் இருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த அமைப்பின் செயல்பாடுகளால் இதுவரை 400,000 சிறுவர்கள் போதிய ஊட்டச்சத்து ஏதுமின்றி பரிதாப நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக சிறுவர்கள் முகமை சுட்டிக்காட்டுகின்றது. மட்டுமின்றி லட்சக்கணக்கான சிறுவர்கள் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் கிட்டாமல் பரிதவிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுகளால் அடுத்த ஓராண்டில் மட்டும் 90,000 சிறுவர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அந்த அமைப்பு, இது தினசரி 240 சிறுவர்கள் வரை உயிரிழக்கும் பரிதாப நிலை நீடிப்பதாக கூறுகின்றது.
வளரும் போதிய நடவடிக்கை மேற்கொள்ள தவற நேரிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
நைஜீரியாவில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக 1.7 மில்லியன் மக்கள் தங்களது குடியிருப்பு நிலம் தொழில் என அனைத்தையும் விட்டு வெளியேறி அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகின்றனர்.
குடியிருப்பை விட்டு வெளியேறிய மக்களுக்கு தங்களின் குடும்பத்தை பாதுகாக்க தேவையான வருவாய் ஈட்ட போதிய வழியின்றி அல்லல்பட்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக குறித்த பகுதியில் ஒன்றரை கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 70 லட்சம் பேருக்கு உடனடியாக உயிர் காக்கும் உதவிகள் தேவை. அதில் பகுதிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com