டிரம்பின் தொடரும் அதிரடி! வாக்காளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஆரம்பம்

donald1அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அதன் வரிசையில் அமெரிக்காவில் வாக்காளர் மோசடி குறித்த பிரான விசாரணை முன்னெடுக்கப்படும் என டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

பல மில்லியன் சட்டவிரோத வாக்காளர்கள் உள்ளதாக கோரியுள்ள டிரம்ப், இரண்டு மாநிலங்களில் வாக்களிக்க பதிவு செய்தவர்கள், சட்டவிரோதமானவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மரணித்தவர்கள் வாக்களிக்க பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஐந்து மில்லியன் சட்டவிரோத வாக்காளர்கள் ஹிலாரிக்கு வாக்களித்ததாக குற்றம்சாட்டிய டிரம்ப் அதற்கான ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.

விசாரணையின் முடிவுகளை பெறுத்து வாக்களிக்கும் வழிவகைகள் பலப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், டிரம்ப் மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டும் தனது திட்டம் உட்பட குடியேற்றம் தொடர்பான ஆணைகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-http://news.lankasri.com