சியாட்டல்(யு.எஸ்) தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார்.
இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.
அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர்.
இன்னும் சிலர் பார்வையாளர்கள் போல் அரங்கத்திற்குள் சென்று விட்டனர். அங்கும் வெவ்வேறு வாசல்களில் மறியல் செய்யத் தயாராக இருந்தனர்.
வெளியே தமிழர்களின் போராட்ட முழக்கங்களைப் பார்த்த விழாக்குழுவினர், சுப்ரமணியசாமியை ஒரு பழைய காரில் யாருக்கும் தெரியாத வகையில் அழைத்து வந்தனர். ஆனாலும் அதைக் கவனித்து விட்ட தமிழர்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் முழக்கமிட்டனர்.
“நாங்கள் தமிழர்கள்.. நாகரீகம் மிக்கவர்கள் தமிழனம் தொன்மையானது தமிழர் நாகரீகம் மேன்மையானது நாகரீகம் தெரியாத ‘பொறுக்கி’ சுப்ரமணிய சாமியே திரும்பிப் போ நாகரீகம் தெரியாதவர் இந்தியப் பாரம்பரியம் பற்றிப் பேசுவதா ”
போன்ற முழக்கங்களை ஆங்கிலத்தில் உரக்கக்கூவிய படி முன்னேறினார்கள். நிலைமையை உணர்ந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் வந்து என்னவென்று கேட்டார்கள்.
தமிழனத்தை தரக்குறைவாக பேசியவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துள்ளோம் என்றவுடன், அமைதியாக போராடுங்கள் என்று கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
அமெரிக்காவில் தமிழர்களின் எதிர்ப்பை சற்றும் எதிர்ப்பார்க்காத சுப்ரமணியசாமி பதற்றமடைந்து விட்டார். அரங்க வாசலிலும் தமிழர்கள் குழுமியிருந்ததைப் பார்த்த விழாக்கமிட்டியினர் அவரைப் பின்வாசல் வழியாக அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சுப்ரமணிய சாமி பேசும் வரை அமைதியாக அரங்கத்திற்குள் இருந்த தமிழர்கள், அவர் பேச ஆரம்பித்ததும் கைத்தட்டி ஆரவாரம் செய்து கவனத்தை திருப்பினார்கள். அதைப் பார்த்த சுப்ரமணிய சாமி, பேச்சை நிறுத்தி சத்தம் வந்த திசையைப் திரும்பிப் பார்த்தார்.
உடனே, அனைவரும் ‘நாங்கள் தமிழர்கள், தமிழர்களை இழிவாக பேசியதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம், தமிழர்கள் வாழ்க, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
வெளியே வந்த தமிழர்கள், நிகழ்ச்சி முடியும் வரையிலும் காத்திருந்தனர். தமிழர்கள் போய்விட்டனர் என்று நம்பி வந்த சுப்ரமணிய சாமி மீண்டும் தமிழர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.
அங்கிருந்து ஒரு தமிழ்ப் பெண் மிகவும் ஆவேசத்துடன், “தமிழர்களை எப்படி பொறுக்கி என்ற சொல்லலாம். எங்கள் தமிழக இளைஞர்களின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பார்த்தீர்களா?
என் அண்ணன் தம்பிகளையை பொறுக்கி என்று பேச உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள். நாகரீகமாக பேசத் தெரியாத நீங்களா இந்தியக் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள்,” என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் முழங்கினார்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்று பதறிய விழாக்குழுவினர் சுப்ரமணிய சாமியை விரைவாக அழைத்துச் சென்று விட்டனர்.
மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என கடும் குளிராக இருந்த போதிலும் குழந்தைகளுடன் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு விட்டனர்.
இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அங்கேயே இருந்து, சுப்ரமணிய சாமி திரும்பிப் போகும் வரையிலும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
– One India
இவர் எந்த நாட்டுக்குப் போனாலும் இவர் துரத்தி அடிக்கப்பட வேண்டும்!
தமிழன் என்றால் இளிச்சவாயனா? கண்டவன் நின்னவன் எல்லாம் நம்மை உரசி பார்க்கிறான். அதற்க்கு முதல் காரணம் நம்மிடையே உள்ள ஒற்றுமையில்லாமையே. ஆனால் இப்பொழுதாவது நம்மிடையே இப்படி போன்ற ஒற்றுமையை காணும்போது, நமது உண்மை மதிப்பை நாம் மீட்டு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழில் பேசுவதோடு நமது இன மதிப்பையும் நிலைநிறுத்த வேண்டும். நமக்குள் எவ்வளவே வித்தியாசங்களும் வேறுபாடுகளும் இருக்கலாம் ( எல்லா இனத்திலும் இவை உண்டு) அதற்காக மற்றவன் எவனும் நம்மை இழிவுபடுத்த இடம் கொடுக்க கூடாது.ஒரு தமிழன் இழிவுபடுத்தப்பட்டால் மற்ற தமிழன் அவனுக்கு கைகொடுக்க வேண்டும். ஒரு சமயம் இரு சகோதரர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தது. அவ்வேளையில் ஒருவன் அவர்களில் இளையவனை நோக்கி தவறாக பேசிவிட்டது மூத்தவனின் காதில் விழவே. சற்றும் எதிர்பாராத விதத்தில் அந்த மூன்றாமவனை பிடித்து சரமாரியாக திட்டி தீர்த்துவிட்டார். அதுபோல ஒவ்வொரு தமிழனும் அடுத்த தமிழனை காக்கவேண்டும். அதனால் மற்றவர்களை நாம் வெறுக்கவேண்டுமென்பதில்லை. நமது ஒற்றுமையை பேணி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எடுத்து காட்டுவோம். அப்பறம் எவனும் நம்மை தீண்டமாட்டான். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.
இனியாவது தமிழர்கள் திருந்த வேண்டும் , “தமிழ் பேசுபவனெல்லாம் தமிழன் அல்ல ” . இவனை போல் நம்மிடையே நிறைய கபட தாரி கூட்டம் உள்ளன . தமிழனுக்கு பிறந்தவனே தமிழன் ….தமிழன்டா ….