உலகில் எந்த நாட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தெரியுமா?

childrensபொதுவாக உலகில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் குழந்தைகள். ஆனால் தற்போது உள்ள காலகட்டங்களில் பெற்றோர்களுக்கே அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து சரிவர தெரிவதில்லை.

காரணம் எந்திரமயமான இந்த உலகத்தில் குழந்தைகளை கவனிக்க பெற்றோர்கள் முற்படுகிறார்கள் இல்லையோ, வேலை மற்றும் பணம் போன்றவைகளில் முக்கியம் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு அங்குள்ள குழந்தைகள் பள்ளி அல்லது அவர்களை பார்த்துக் கொள்வதற்கு ஒரு பணியாள். இவர்கள் மூலம் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டால் அதற்கு சரியான பதில் அளிப்பது கடினம்.

இந்நிலையில் UNICEF (United Nations Children’s Fund) உலகில் எந்த நாட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்ற தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் நெதர்லாந்து குழந்தைகளே மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது. அதற்கான ரகசியத்தையும் அது வெளியிட்டுள்ளது.

அதில், அவர்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உணவு சாப்பிடுவது அவர்களை அதிகமாக பேச வைக்கிறது. மேலும் நெதர்லாந்தில் வாழும் பெரும்பாலான குழந்தைகள் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்வதற்கு முன் காலை உணவை மறக்காமல் உண்டு செல்கின்றனர்.

இது அவர்களுக்கு நல்ல ஒரு துவக்கமாக அமைவதுடன், அன்றைய நாளை அவர்களுக்கு இது ஒட்டு மொத்தமாக மகிழ்ச்சியாக்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நெதர்லாந்தில் உள்ள குழந்தைகள் பெரும்பாலானோர் காலை உணவாக சாக்லேட் சாப்பிட்டாலும் அவர்கள் ஆரோக்கியமுடனே காணப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதுமட்டுமின்றி பள்ளிகளில் அவர்களுக்கு படிப்புகள் மற்றும் தேர்வுகள் போன்றவைகளில் அழுத்தம் கொடுப்பதில்லை. இதனால் அவர்கள் தங்களின் பள்ளி வாழ்க்கையை சாதகமாக துவக்க இது வழி செய்கிறது.

இந்த அழுத்தமற்ற துவக்கம் குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்றும் அது வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்நாட்டில் குழந்தைகள் அதிக அளவு வெளியில் சென்று விளையாடுவதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

-http://news.lankasri.com