அம்னோ விவகாரங்களுடைய பரிதாபகரமான நிலைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது பழி போடப்பட்டாலும் அந்த மலாய் தேசியவாதக் கட்சியின் சிரமங்களுக்கு அதன் கூட்டுத் தோல்வியே காரணம் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார்.
Kesilapan-kesilapan Najib (நஜிப்பின் தவறுகள்) என்ற தலைப்பைக் கொண்ட அந்தப் புத்தகம் அம்னோ தலைவர் என்ற முறையிலும் பிரதமர் என்ற முறையிலும் நஜிப் தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிடுகிறது.
அதனால் அவர் நாடு 13வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னர் “தம்மைத் தியாகம் செய்து கொள்ள வேண்டும் அல்லது பதவி துறக்க வேண்டும் எனவும் அந்தப் புத்தகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“நஜிப்பை வீழ்த்துவதற்கு அம்னோவுக்குள் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை அந்த புத்தகத்தின் வெளியீட்டிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் அதிகாரத்திலிருந்து நஜிப்பை விரட்டுவதற்கான இயக்கமும் வலுவடைந்து வருவதுடன் துணிச்சலும் பெற்று வருகிறது.”
“அடுத்து வரும் தேர்தலில் அம்னோ/பிஎன் வரலாறு காணாத தோல்வியைத் தழுவுவது நிச்சயமாகி வருகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தோல்விகளுக்குப் பலிகடாவை இப்போது அம்னோ தலைவர்களும் பிரிவுகளும் தேடி வருகின்றன.”
“மோசமான நடப்பு அம்னோ நிலைக்கான பழியில் பெரும்பகுதியை நஜிப் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் நீண்ட கால அம்னோ கூட்டுத் தோல்விகள் இந்த நிலைக்கு வித்திட்டன,” என சுரேந்திரன் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் வாங்சா மாஜு அம்னோ தலைவர் ஷாபுடின் ஹுசேன் எழுதியுள்ள அந்தப் புத்தகம் பற்றி சுரேந்திரன் கருத்துரைத்தார்.
நஜிப் செய்துள்ள பல தவறுகளை அந்தப் புத்தகம் பட்டியலிடுகிறது. 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் பதவி துறக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொள்கிறது.
நஜிப்பின் ஒரே மலேசியா, தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சை அகற்றியது, அளவுக்கு அதிகமான செனட்டர்களைக் கொண்ட பலவீனமான அமைச்சரவை, உதவித் தொகைகளைக் குறைத்தது. ரோஸ்மாவின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டது. அப்கோ நியமனம், அமைச்சரவையையும் உறுப்புக் கட்சிகளையும் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டது, கொள்கைகளில் நேர்மாற்றங்கள் ஆகியவை நஜிப்பின் தவறுகளில் அடங்கும் என அந்தப் புத்தகம் பட்டியிலிட்டது.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் போக்கை அனுமதித்தது. தமக்கு உதவி செய்யத் தவறி விட்ட பல அதிகாரிகளை தன்னிடம் வைத்திருப்பது, பெர்சே 2.0ஐ கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டது, தீய, கறை படிந்த அரசியல் பண்பாட்டை அங்கீகரித்தது, கேள்வுக்குரிய பல உருமாற்றுத் திட்டங்களை வைத்திருப்பது ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ள மற்ற நஜிப் தவறுகளாகும்.