டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒன்று சேர்ந்த சுவிஸ் மக்கள்! வலுக்கும் எதிர்ப்பு

swissடொனால்டு டிரம்ப் ஏழு நாடுகளை சேர்ந்த மக்களை அமெரிக்காவில் அனுமதிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிஸ் மக்கள் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளார்கள்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிலும் ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அவர் கூறியது பெரிய அதிர்வலைகளை எழுப்பியது.

பல உலக நாடுகள் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையில் சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் மக்கள் campax.org என்னும் அமைப்பின் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

7249க்கும் மேற்ப்பட்ட மக்கள் இது வரை டிரம்ப்க்கு எதிராக கையெழுத்து போட்டுள்ளர்கள்.

மேலும், டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பெட்டிஷனில் கையெழுத்திடப்பட்டு,சுவிஸ் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனாலும், மக்களின் இந்த விடயம் குறித்து சுவிஸ் அரசு இதுவரை எவ்வித கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com